Sunday 20 November 2011

இடுபணி-ஒலியியல்

ஒலியியல் - புனைகருத்து
     ஒலியியல்(phonology) என்பது ஒரு மொழியின் ஒலி அமைப்பைப் பற்றிய ஆய்வாகும். மொழியின் ஒலி அமைப்பு முறை எவ்வாறு இயங்குகிறது என்பதையும் அதன் பயன்பாட்டு முறையையும் பற்றி ஆய்வு செய்வதாகும். ஓரு மொழியில் எழுகின்ற ஒலிகள் எந்த வகையைச் சார்ந்தது ( உயிர் ஒலிகள்(vowels), மெய் ஒலிகள்(consonants) என்பதையும் அவ்வொலிகள் மனித உடல் பகுதியிலிருந்து எவ்வாறு பிறக்கின்றன என்பதையும் ஆய்வு செய்யும் துறையாக ஒலியியல் விளங்கி வருகின்றது. ஒலியியல் ஆய்வில் ஒலியன்களின்(phonemic) பயன்பாட்டையும் பயன்படுமுறையையும் பற்றிய ஆய்வுகள் தொடர்ந்துக் கொண்டே வருகின்றன.
    
மேனாட்டு அறி»÷ பெரங் பாக்கர்(Frank Parker) அவர்களின் கூற்றுப்படி(1994) ஒலியியல் என்பது ஒரு மொழியின் ஒலி அமைப்பு தொடர்பான விவரங்களையும் ஒலி தொடர்பான கூறுகளையும் ஆய்வு செய்வதாகும் என கூறுகின்றார். மேலும் ஒரு மேனாட்டு மொழியியல் ஆய்வாளரான தாள்பர்(Darbor) என்பவர் ஒலியியல் என்பது, மனிதர் ஒலிக்கும் ஒலியின் பயன்பாட்டையும் ஒலிப்பு முறையின் வகையையும் ஆய்வு செய்வதாகும் என்று கூறுகின்றார். மேனாட்டில் ஒலியியல் தொடர்பான ஆய்வுகள் இருநூறு ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கிவிட்டன.

செயல்முறை விளக்கம்
     ஒலியியல் ஆய்வானது ஒலியின் அமைப்பு முறையைப்பற்றி புரிந்து கொள்வதாகும். ஒலியின் அமைப்பை மொழி வடிவில் புரிந்து கொண்டு மொழி கூறுகளை ஒலியின் பார்வையில் ஆராய்வதாகும்.
மக்கள் ஒருவரை ஒருவர் தொடர்பு கொள்ளவும் உச்சரிப்பு முறையை செவ்வன அறிந்து கொள்ளவும் ஒலியியல் ஆய்வு முறை அனைத்து மொழிகளிலும் நடைப்பெற்றுக் கொண்டே வருகின்றது. ஒலியில் காணக்கிடக்கும் ஒலிப்பு தகவல்களையும் நெறி முறைகளையும் ஒழுங்கு முறையில் கற்றுக் கொள்ள ஒலியியல் துறையில் ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகின்றன. ஒலியியல் இரண்டு பிரிவாக உள்ளடிக்கியுள்ளது. அவை ஒலிப்பியல்(phonotics) மற்றும் ஒலியன்(phonomics) ஆகும்.

ஒலிப்பியல்
     ஒலிப்பியல் என்பது மனிதர்களின் நாவின் வாயிலாக வெளிவரும் ஒலிகளை ஆய்வு செய்யும் துறையாகும். நாவின் வாயிலாக வெளியே வரும் ஒலிக்கு வடிவம் கொடுத்து அவற்றைப் பேச்சு மொழியாகவும் தொடர்பு மொழியாகவும் மாற்றியமைக்கும் ஆய்வாகும். உதடு, பல், அண்ணம், உள்நாக்கு, காற்றுக்குழல், குரல்வளை, தொண்டை போன்ற உறுப்புகள் ஒலியைத் தோற்றுவிக்கின்றன. ‘இன்ன ஒலியுறுப்புகள் இன்ன முறையில் இயங்குவதால் இன்ன ஒலி பிறக்கிறது’ என்ற ஆய்வுகள் ஒலியியல் துறையில் நடைப்பெற்றுக் கொண்டிருக்கின்றன.  மேனாட்டு மொழியியலாளர்களான Kenstowicz மற்றும் Kisseberth (1979) கூறுகையில்The study of the sounds human beings employ when speaking a language is phonetics.” “மனிதர்கள் உரையாடும் போது வாயிலிருந்து வெளிவரும் ஒலி ஒலிப்பியல் என்று கூறுகின்றனர்”. ஒவ்வொரு மொழிக்கும் அடிப்படை ஒலியாக இருப்பது முதல் ஒலி ஆகும். முதலொலியை ஒட்டியே எழுத்து அமையும்.
ஆகையால் ஒரு மொழியின் எழுத்துகளைக் கொண்டு மற்றொரு மொழியை எழுதும்போது தடங்கள் தோன்றிற்று.
இதை தவிர்க் மொழியியலாளர்கள் உலக ஒலி எழுத்து (International Phonetic) முறையை உருவாக்கினர். ஒலிப்பியல் ஆய்வானது மூன்று வகையான அணுகுமுறையில் பிரிக்கப்பட்டு ஆராயப்படுகின்றது. இவை மூன்றும் வெவ்வேறு  கூறுகளாக கையாளப்படுகின்றன.
               
ஒலிப் பிறப்பியல் பிரிவில் மனித ஒலி உறுப்புகள்(artikulatori) எவ்வாறு இயங்குகின்றன, ஓசைகள் எவ்வாறு பிறக்கின்றன என்பதைப் பற்றிய ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகின்றன. கேட்பொலியல்(auditori) பிரிவில் நவின கருவிகளைப் பயன்படுத்தி ஒலிகளின் தன்மையை ஆராய்வதாகும். இதன் மூலம் எல்லா ஒலிகளின் முழு விவரங்களையும் பண்புகளையும் கண்டறிய இந்த ஆய்வு மேற்கொள்ளப்படுகின்றது. அலை ஒலிப்பியலை(akustik)  கையாளும் போது  ஒலியியலாளர்கள் (palatogram, letromiografi, laringoskopi) போன்ற கருவிகளைப் பயன்படுத்தி மொழியில் உள்ளடக்கிய   அலைகளின் இயல்புகளை ஆராய்கின்றனர். ஒலியுறுப்பின் அசைவுகளினால் ஏற்படும் காற்றணுக்களின் மாற்றத்தைப் பற்றியும் பேச்சொலிகளின் பண்பு நலன்களைப் பற்றியும் ஆராய்கின்றனர்.இதனை பெளதிக மொழியியல் என்று கூறுவதும் உண்டு. 

1.
மூக்கறை
11.
நாக்கு(நடு)
2.
கீழ் உதடு
12.
நாக்கு(பின்)
3.
பல் மேற்பகுதி
13.
நாக்கு வேர்
4.
பல் கீழ்பகுதி
14.
இப்பிக்லொடிச்
5.
பல் இடுக்கு
15.
குரல்வளை
6.
மேல் அண்ணம்
16.
அடித் தொண்டை
7.
பின் அண்ணம்
17.
மூக்கு துவாரம்
8.
மேல் தொண்டை
18.
வாயறை

 
ஒலியன்
     ஒலியன் என்பது ஒரு மொழியில் பிறக்கின்ற ஒலியை ஆய்வு செய்வதாகும். இந்த ஆய்வானது ஒரு ஒலியின் கட்டமைப்பு முறையை நுணுகி ஆராயப்படும் ஆராய்ச்சியாகக் கொள்ளப்படும். மொழியில் உள்ள ஒலிகளை விளக்க மொழியியல் (Descriptive Linguistics) அடிப்படையில் மொழியியலாளர்கள் ஆராய்ந்தனர். அவ்வாறு விளக்கும்போது அவ்வொலியானது எந்த வகையைச் சார்ந்த்து ( உயிர் , மெய் ) என்பதை  ஆராய்ந்து  வகுத்துள்ளனர்.

ஒலிப்பிடங்களும் ஒலிக்கும் முறைகளும்
ஒலிப்பு முறையை அடிப்படையாகக் கொண்டே பேச்சொலிகளை உயிர் எனவும் மெய் எனவும் இரண்டாகப் பிரித்தனர். ஒலிப்பு வகைகளை ஏழாக வகைப்படுத்தினர்.


உயிர் ஒலிகளின் பாகுபாடு
மொழியியலார் தமிழில் உள்ள ஒலிகளை அவை பிறக்கும் முறையை அடிப்படையாக்க கொண்டு அவற்றை முன் அண்ண உயிர்  ஒலிகள், பின் அண்ண உயிர் ஒலிகள், முன் இடை உயிர் ஒலிகள், பின் இடை உயிர் ஒலிகள், தாழ் நடு உயிர் ஒலிகள் என ஐந்து வகையாகப் பாகுப்படுத்தி விளக்கியுள்ளனர். 
 
1.   முன் அண்ண உயிர் ஒலிகள் (Front Vowels)
முன் அண்ண உயிர் ஒலி எனப்படுவது இ ஆகும். இது ‘இ’ எனும் உயிர் ஒலியை வெளிக் கொண்டுவர நாக்கானது வாயினுள் மேற் சென்றும், தாழ்ந்தும், முன்னும், பின்னும் நகர்ந்தும் மிடற்றிலிருந்து வரும் காற்றினை ஒரு குறிப்பிட்ட ஒலியாக வெளிக்கொண்டு வருகிறது. அவ்வாறு நாக்கானது மேல் எழுந்து மேல் எழுந்து முன்பக்கமாக அமைந்து, ஒலியை தடையின்றி வெளிக்கொண்டு வருகிறது. ‘இ, ஈ’ என்னும் இரு உயிர்களும் உரே இடத்தில் பிறக்கின்றன. இதனை(Velar Vowels) என்று மொழியியலார் கூறுகின்றனர். ‘’ குறுகிய உயிர்ஒலி என்றும் ‘’ என்பதை நெடிய உயிர்ஒலி என்றும் அழைப்பர். இதுவே முன் அண்ண உயிர் ஒலியாகும்.

2.   பின் அண்ண உயிர் ஒலிகள் (Back Vowels)பின் அண்ண உயிர்  எனப்படுவது உ ஆகும். இது ‘உ’ எனும் உயிர் ஒலியை வெளிக் கொண்டுவர நாக்கானது வாயில் மேல் எழுந்து பின்னோக்கிப் போகின்றது. அந்த நிலையில் உச்சரிக்கும்போது இதழ்கள் குவிந்து இருப்பதை உணரலாம். இவ்வொலியைச் சற்று நீட்டி ஒலித்தால் எனும் நெடிய உயிர் ஒலி பிறக்கிறது. இங்கு ‘உ, ஊ’ எனும் உயிர் உலிகளை ‘labial vowels’ என்று மொழியியலார் கூறுகின்றனர். இதுவே பின் அண்ண உயிர் ஒலியாகும்.

      
    
3. முன் இடை உயிர் ஒலிகள் (Front-Mid Vowels)முன் இடை உயிர்  எனப்படுவது எ ஆகும். இது ‘எ’ எனும் உயிர் ஒலியை வெளிக் கொண்டுவர நாக்கானது வாயின் முன்னுக்கு நகர்ந்து காற்றினைத் தடையில்லாமல் ஒலிக்கச் செய்யும்போது எனும் உயிர் ஒலி பிறக்கிறது. அவ்வாறு உச்சரிக்கும்போது நாக்காநனது மிக உயரத்தில் இல்லாமலும் தாழ்ந்த நிலையில் இல்லாமலும் இடையில் நின்று இருப்பதால் இதை இடை உயிர் ஒலி (mid vowel ) என்கின்றனர் மொழியியலார். இது போன்ற சூழ்நிலையில் இதழ்கள் குவியாமல் இருக்கின்றன. ‘’ என்பதையே சற்று நீட்டி ஒலித்த்தால் எனும் நெடிய உயிர் ஒலி கிடைக்கிறது. இதுவே முன் இடை உயிர் ஒலியாகும்.


4. பின் இடை உயிர் ஒலிகள் (Back Mid Vowels)பின் இடை உயிர்  எனப்படுவது ஒ ஆகும். இது ‘ஒ’ எனும் உயிர் ஒலியை வெளிக் கொண்டுவர நாக்கானது சற்றுக் கீழிலிருந்து மேல் எழும்போது பிறக்கிறது. அந்த நிலையில்  நாக்கானது சற்றுப் பின்னுக்குத் தள்ளப்படுகிறது. இது போன்ற நிலையில் இதழ்கள் குவிந்து காணப்படுகின்றன. இவ்வொலியைச் சற்று நீட்டி ஒலித்தால் எனும் நெடிய உயிர் ஒலி கிடைக்கிறது. இதுவே பின் இடை உயிர் ஒலியாகும்.

5. தாழ் நடு உயிர் ஒலிகள் (Low Centre Vowels)தாழ் நடு உயிர்  எனப்படுவது அ ஆகும். இது ‘அ’ எனும் உயிர் ஒலியை வெளிக் கொண்டுவர நாக்கானது வாயினுள் தாழ்ந்த நிலையிலேயே நின்று அதிலும் நடுவினுள் இருந்து ஒலியை எழுப்புகிறது. இவ்வுயிர் ஒலியை என்பர். இவ் அகர ஒலியை உச்சரிக்கும்போது இதழ்கள் குவிவது கிடையாது. இவ் உயிர் ஒலியைச் சற்று நீட்டித்து ஒலித்தால் என்னும் நெடில் உயிர் ஒலி பிறக்கிறது. இதுவே தாழ் நடு உயிர் ஒலியாகும்.

                          

உயிர் ஒலிகளுக்கான வரைப்படம்
தற்கால மொழியியலாளர் வாயினுள் நாவானது எவ்வாறெல்லாம் நின்றும், நகர்ந்தும், மேல் எழுந்தும் உயிர் ஒலிகளை ஒலிக்கிறது என்பதை கீழ்காணும் வரைபடங்களால் விளக்கி காட்டுகின்றனர்.

No comments:

Post a Comment