Sunday 20 November 2011

PGSR BAHASA TAMIL - இடுபணி-மொழிச்சிதைவு

மொழிச் சிதைவே ஓர் இனத்தில் சிதைவு என்பதைத் தமிழர்களுக்கு வரலாறு கற்றுக் கொடுத்த ஒப்பற்ற பாடம். “ஓர் இனத்தை அழிக்க வேண்டுமானால் அவ்வினத்தின் மொழியை அழித்துவிடுங்கள்என்பர். மொழி இனத்தின் அடையாளம் அல்ல, இனத்தின் உடல்! உயிர்! மூச்சு! அனைத்துமே!. ‘தமிழ் எங்கள் உயிர்என்ற பாவேந்தர் கூற்று வெறும் மொழியின்பால் கொண்ட அன்பினாலும், பற்றுததாலும் எழுந்தவை அல்ல. அவர்  வரலாற்றுப் படிப்பினையை மூன்று பதத்தால் பதித்துவிட்டே சென்றியிருக்கிறார் எனத் தோன்றுகிறது.

மொழிச்சிதைவென்பது மொழியின் தூய்மையினை சிதைக்கும் செயலாகும். ஒரு மொழியின் தொன்மையை பாழ்படுத்தும் இழிச்செயலே மொழிச்சிதைவாகும். மொழிக்கென உள்ள முகவரியை அதாவது அதன் தனிச்சிறப்பை அழிக்கும் செயலே மொழிச்சிதைவாகும். ஒரு மொழியை அதன் விதிகளுக்கு முரண்பட்டு பிழைப்பட கையாளுவதும் மொழிச்சிதைவே.

தமிழில் தொன்று தொட்டு அஃதாவது சங்க இலக்கிய காலத்திற்கு முன்பே இரண்டு வகைத் தமிழ் இருப்பதை உணரலாம். ஒன்று செந்தமிழ்; மற்றொன்று கொடுந்தமிழ். இன்று எழுத்துமொழி என்றும் பேச்சுமொழி என்றும் இதனை வேறுபடுத்திக் கூறுவர். இருப்பினும் இதை இரண்டாக வேறுபடுத்திப் பார்ப்பதில்லை. ஏனெனில் செந்தமிழே பிற்காலத்தில் கொடுந்தமிழாக மாறிவுள்ளது. கொடுந்தமிழிலிருந்து செந்தமிழ் அல்ல. முழுமையெய்திய ஒன்றே பின்பு முழுமையிலிருந்து விலகுகிறது. அவ்வாறு செம்மை நிலையிலிருந்து தமிழ் விலகிச்சென்றிருக்கிறது ஒழிய, விலகிய கொடுந்தமிழுக்குத் தனித்தோற்றமில்லை. ஆகவேதான் பேச்சுத்தமிழை வேறொறு மொழியாகப் பார்க்க இயலாதது. செம்மை என்பது இங்குச் செங்குத்தான அல்லது நேரான எனும் பொருளில் ஆளப்படுகிறது. மன்னர்க்கழகு செங்கோன் முறைமை என்பது வெற்றிவேற்கை. செங்கோன் என்பதுநேர்என்று பொருள்கொள்கிறது. செங்கோன் என்பதற்கு நேர்மறையான சொல் கொடுங்கோல். இங்குக் கொடும் என்ற சொல் வளைந்த என்ற பொருள் உடையது. செந்தமிழ் உச்சரிப்பிலிருந்து சற்று நெகிழ்ந்ததே கொடுந்தமிழ். கொடுந்தமிழ் இன்று பலரால் பேசப்படும் தமிழ் மொழியாக மாறிவருகின்றது என்றால் மிகையாகாது.

செந்தமிழ் எவ்வாறு கொடுந்தமிழ் ஆனாது என்பதும் நம் சிந்தையில் எழுகிற அறிவார்ந்த வினாதான். தொல்காப்பியர் கூறும் தமிழ்கூறும் நல் உலகின் எல்லை தெற்கே குமரியாற்றிலிருந்து வடக்கே வேங்கடம் வரைக்கும் ஆகும். இன்றைய மலையாள நாட்டையும் அதன் வடக்கேயுள்ள தென் கன்னட மாவட்டத்தையும் இஃது உள்ளடக்கியதாயிருந்தது. ஆனால் இன்று இவ்வெல்லைகள் இன்னும் சுருங்கி இன்றைய தமிழ்நாட்டை மட்டும் குறிப்பதாயிற்று. இவ்வெல்லைகள் சுருக்கத்திற்கு அரசியல் என்பது காரணியாக மட்டும் கொள்ளக்கூடாது. மொழிச்சிதைவே மூலம் ஆகும்.
செந்தமிழ் நிலம் என்று அன்று குறிப்பிட்டிருந்த நிலம் வெறும் குமரிநாடாகவே இருக்க முடியும். ஏனெனில் பேச்சில் செந்தமிழாக இல்லாதிருப்பின் எவ்வாறு இலக்கியத்தில் மட்டும் செந்தமிழாக ஆளப்பெறும்? மாந்தர் பிறந்தகமாகவும், தமிழ் பிறந்தகமாவும் கொள்ளப்படும் குமரி நாடு பல நூற்றாண்டுகளில் ஏற்பட்ட ஆழிப்பேரலைகளால் இன்று முற்றிலும் அழிந்தது. இருப்பினும் இது வெவ்வேறு காலகட்டத்தில் ஏற்பட்டமையால் தமிழர்கள் வடக்கு நோக்கி செலவு மேற்கொண்டனர். இக்காலகட்டத்தில்தான் செந்தமிழ் பேச்சில் கொடுந்தமிழாக மாறிய நிலை உருவாயிற்று. ‘முதற் சங்க சங்ககாலத்தில் செந்தமிழ் நிலமாக கருதப்பட்ட குமரியாற்றின் தென்பகுதி தொல்காப்பியர் காலத்துக்குள் தலைநகரின் மாறுபாட்டால் கொடுந் தமிழ்ப்பகுதியாகக் கருதப்பட்டது என்பது பொருந்தும்.’                   –.கா.அப்பாதுரையார்.
காலவேறுபாட்டாலும் இடவேறுபாட்டாலும் மக்கள் அவர்தம் பேச்சில் செந்தமிழைத் தொடர்ந்து பேணாதது கொடுத்தமிழாகியது. ஆக, செந்தமிழ் கொடுந்தமிழாகியது தமிழ் இனத்திற்கு ஏற்பட்ட முதல் வீழ்ச்சி. ,, கரத்தையும், , கரத்தையும், ,, ணகரத்தையும் தம் அன்றாட வாழ்கையில் வேறுபட்ட ஒலியில் மிகவும் இயல்பாகப் பேசி வந்த குமரி நாட்டுத் தமிழனோடு, இன்று ,, கர ஒலி வேறுபாட்டிற்கே ஒரு மணிநேரம் பாடம் எடுக்கப்பட வேண்டிய தமிழர்களையும் ஒப்பிடுகையில், நாம் நம் நுண்றிவை, நுண்புலனறிவை எவ்வளவு இழந்துவிட்டோம்சொல்லியும் மாளாது.
அடுத்துக் கொடுந்தமிழ் வெறும் தமிழாக மட்டும் நின்றுவிடவில்லை. தென்னகத்திலிருந்து கொண்டு சென்ற தமிழ் வடக்கே செல்ல செல்ல மெல்ல மெல்ல கொடுந்தமிழ் இன்னும் பல திரிபுகள் அடைந்தது. ஒருங்கே அமைந்த கொடுந்தமிழ் திரிபுகள் கன்னட, தெலுங்கு, மலையாளம், துளு என புதுமொழியாகத் தோன்றின. கொடுந்தமிழ் சொற்களே அம் மொழிகளுக்குப் பண்பட்ட மொழியாக இருப்பதை இன்றும் காணலாம். கொடுந்தமிழ், பல மொழிகளாகியது ஓரிரு ஆண்டுகளில் நிகழ்ந்ததன்று. பல நூற்றாண்டுகளில், பல காலங்களிலும், பல சூழல்களிலும் கொஞ்சம் கொஞ்சமாகப் பல திரிபுகளுற்றே புது மொழியாகியுள்ளது.
சான்று கீழ்வருமாறு;
‘12ஆம் நூற்றாண்டில் மலையாள மொழி தமிழிலிருந்து பிரிந்தது. அதே சமயம்தெலுங்கு-கன்னடம்இருமொழியாகப் பிரிவுற்றது. கன்னடம் தெலுங்கைவிடத் தமிழுடன் நெருங்கிய தொடர்புடையது. இம்மாறுபாடுகள் கி.பி 16ஆம் நூற்றாண்டுக்குள் நிறைவேறினகா.அப்பாதுரையார்.
விக்கிபேடியா தரும் சான்றுகள்;-
கி.பி. 1000 ஆண்டுக்கு முந்தய கல்வெட்டுகளில் தெலுகு என்ற சொல் காணமுடியாது. 11வது நூற்றாண்டில் தெலுங்கு பூமிபாலுரு, தெல்கரமாரி          தெலிங்ககுலகால தெலுங்க நாடோளகண மாதவிகெறிய போன்ற குறிப்புகள் காணக்கிடைக்கின்றன. 11ஆம் நூற்றாண்டுக்கு பிறகே தெனுகு என்ற சொல் வழக்கில் வரத்துவங்கியது. திரிபுற்ற நிலையில் மக்கள் பேசி வந்த கொடுந்தமிழில் இலக்கியம் படைக்க தொடங்கினர்.
கொடுந்தமிழ் இலக்கிய மொழியாகியது. காலந்தோறும் மக்கள் பேசுவதை அப்படியே எழுத தொடங்கிவிட்ட நிலையில் கொடுந்தமிழும் அழிந்து அதற்குப் புதுப் பெயர் தோன்றிற்று. அதுவே பின்பு கன்னடம், தெலுங்கு, மலையாளம், துளு என்றாயிற்று. இலக்கியம் தோன்றியபின் அம்மொழிகளுக்கு இலக்கணமும் வரையப்பெற்றது. ஆம் அன்றோடு தமிழர், தமிழின் தொப்புள் கொடி உறவு அறுகப்பட்டுவிட்டது. மொழிக்குப் புதுப்பெயர் தோன்றியதென்றால் புது இனமும் தொன்றிற்று என்பதுதானே பொருள்?
ஒரே மொழியும், ஒரே இனமும் பல மொழியாகவும் இனமாகவும் சிதைவடைந்து போனதற்குக் காரணம் பேச்சுமொழியைக் கொண்டு இலக்கியம் படைக்க தொடங்கியதே! இந்த வரலாற்று உண்மையைக் கூடபுத்திகெட்ட புத்திலக்கியவாணர்கள் இன்றும் அறியவில்லை! ஆகவேதான் மக்கள் பேசுவதைப் போல்நவீனமொழியில் எழுதுகிறார்கள், எழுதவும் சொல்கிறார்கள்! என்ன மூடத்தனம் இது பார்த்தீர்களா?
தமிழ் அறிவு குன்றிய தமிழர்கள் பேச்சில் பிறமொழியைக் கலந்து பேசிவருகின்றனர். இன்னும் சிலர் நல்ல தமிழ் சொற்கள் தெரிந்தும் வேண்டுமென்றே வேற்றுமொழி மோகத்தினால் மொழி கலப்புச் செய்கின்றனர். இன்னும் சிலர் பிறமொழி கலந்தால்தான் தாங்களை அறிவுடையவரென்று மக்கள் நினைப்பரென்றுபிரக்ஞை’, ‘இசம்,’ ‘நிதர்சனம்போன்ற செத்த மொழிச் சொற்களைக் கலந்து எழுதுகின்றனர்.
வடமொழி மோகம் ஒரு காலகட்டத்தில் தமிழில் அதிகளவில் புகுந்து தமிழைச் சீர்குலைய செய்தது. இந்நிலை ஓரளவு கம்பர் வாழ்ந்த காலகட்டத்திலே தலைதூக்க தொடங்கிவிட்டது. இருப்பினும் இந்நிலை தமிழுக்கு ஆக்கம் தரவல்லதன்று அறிந்த பின் அக்காலத்திலேயே வடமொழி சொற்களைத் தமிழில் பயன்படுத்த முனைவில்லை.
இவருக்குப் பிந்திய காலத்தில் வடநாட்டார் ஆதிக்கத்தாலும், மோகத்தினாலும் தமிழில் பெரும் அளவு வடசொற்கள் வேண்டுமென்றே கலக்கப்பட்டும் திணிக்கப்பட்டும் வந்துள்ளன. இந்நிலையை தமிழைத் தவிர மற்ற திராவிட மொழிகளாகிய கன்னடம், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழியினர் ஏற்றுக்கொண்டுவிட்டனர். இருப்பினும், முந்திய தெலுங்கு, கன்னட, மலையாளமொழி ஆகிய மொழிகள் தமிழோடு நெருங்கிய தொடர்பு இருப்பதைக் காணலாம். எம்மொழிச் சொற்களையும் தமிழ் ஏற்கவும் இல்லை! ஏற்கவும் ஏற்காது! தமிழே எம்மொழியின் துணையும் இன்றி தானே இயங்க வல்லது என்பதனை நிறுவியது. அப்படி நிறுவிய காட்டிய தமிழ்ச்சான்றோர்கள் பலர்.
இக் கூற்றை மேலும் வலுப்படுத்தும் வகையில், பிறப்பால் தெலுங்கராக இருப்பினும், சற்றும் நடுநிலை தவறாது சீர்த்திருந்த தந்தையாக மட்டும் நமக்கு அறிமுகமாகிய தந்தைபெரியார் ஓரு மொழி வரலாற்று ஆசிரியராகவும் இவ்வாறு கூறுகிறார்வடநாட்டு ஆதிக்கமும், வடமொழி மோகமும் குறையக் குறைய ஆந்திரர்களும், மலையாளிகளும், கன்னடியர்களும் தம் தாய் மொழிதமிழ்தான் என்பதைக் கொஞ்சம் கொஞ்சமாக உணர்ந்து கொள்வார்கள் என்பதில் எனக்குத் திடமான நம்பிக்கையுண்டு.”
வரலாற்று ஆசிரியர், மனோன்மனிய சுந்தரனார் அவர்கள், பல்லுயிரும் பல உலகும் படைத்தளித்துத் துடைக்கினும் ஓர் எல்லையரு பரம்பொருள் முன் இருந்தபடி இருப்பதுபோல், கன்னடமும் களி தெலுங்கும் கவின் மலையாளமும் துளுவும் உன்னு தரத் துதித் தெழுந்தே ஒன்று பல ஆயிடினும், ஆரியம் போல உலக வழக்கு அழிந் தொழிந்து சிதையா உன் சீரிளமைத் திறம் வியந்து செயல் மறந்து வாழ்த் துதுமே! என்று தமிழை வாழ்த்துவதிலும் வரலாற்று உண்மையை மெய்பிக்கிறது.
பிற மொழிச்சொற்களைக் கலந்தும் பேச்சுமொழியைத் தொடர்ந்து எழுதிவந்தால் பின் நாளில் இதுவே ஒரு தனிமொழியாக உருவெடுக்கும். பின்பு தனி இனமாகவும் உருவெடுக்கும். இன்றுதமிங்கிலம்என்று வேடிக்கையாகச் சொல்வது நாளை ஓர் இனமாக, மொழியாக தோன்றியது என்றால் திகைப்படைய வேண்டுவதில்லை. ஏனெனில் அதற்குப் புத்திலக்கியக்கியவாணர்கள் இப்பொழுதே இலக்கே இல்லாமல் தாம் எழுதும் இலக்கியத்தில் இவ் வித்துகளை விதைத்துவருகின்றனர்.
ஐந்து தமிழக மளாவிய முத்தமிழ் அல்லது பழம் பெருந்தமிழ் இன்று இவ்வாறு சிதறுற்றுத் தேய்ந்து, ஒரு தமிழக எல்லையிலும் குறைவுற்று, ஒடுங்கிய ஒரு தமிழ் ஆகியுள்ளதுகா.அப்பாதுரையார்.
அப்படித் தூயத்தமிழ் சமூகத்தைத்தான் காட்ட வேண்டும் தூயத்தமிழ் உரையாடலைத்தான் இணைக்க வேண்டும் என்று இருந்திருந்தால் அது இன்றைய வாழ்வோடு தொடர்பில்லாத துண்டிக்கப்பட்ட கனவு பிரதேசத்தின் கற்பனைத்தனமாக ஆகிவிடும். மேற்கண்ட கூற்றைக் கூறியவரும், அக் கூற்றுக்குத் துணை நிற்பவர்களுமே கற்பனை உலகத்தில் வாழ்வபவர்கள் போலும். ஏனெனில் எந்த மொழியிலுமே, பேசுவதைப் போல எழுதுதல் முடியாது; கூடாது.
மலேசியாவில் வாழ்பவர்களுக்கும் இது நன்கு தெரியும். மாலாய்மொழியில் பேசுவதைப் போல எழுத முடியாது; சீன மொழியிலும் அவ்வாறே, ஆங்கிலத்திலும் அவ்வாறே. இந்த உண்மை உணராதாவர்களும்; தெரியாதவர்களும்தான் கனவில் வாழ்கின்றனர்; அறியாமையில் உலாவுகின்றனர்.
ஆகவே, இதை நன்கு உணர்ந்து, புத்திலக்கியவாணர்கள் நல்ல தமிழையே இலக்கியத்தில் பயன்படுத்துதல் வேண்டும். இதைத் தம் சொந்த இனத்திற்குச் செய்யும் தொண்டாகவே கருத வேண்டும். அதை விடுத்து, பாமரனும் புரிந்து கொள்ளும் வகையில்நவீனமொழியில் பேசுகிறோம், எழுதுகிறோம் என்று குருட்டுத்தனமான சிந்தனையிலே இருப்பார்களானால், இவர்கள் இவ்வினைத்தின் கீழறுப்பர்கள் என்றே கருதப்படுவர்!.
இனமான சிந்தனை உடைய எந்த ஒரு புத்திலக்கியவாணர்களும் இச் செயலைச் செய்யமாட்டார் என்ற நம்பிக்கை  உண்டு!.
தமிழில் ஏராளமான வட மொழி சொற்கள் கலந்து மக்களிடையே புழக்கத்தில் இருந்து வருகின்றன.பல நூற்றாண்டு காலமாக தமிழ் மீது வட மொழி திணிப்பு நடந்தேறி வருவதால் தமிழ்ச்சொல் எது வடமொழிச்சொல் எது என பிரித்தறிவதே கடினமான ஒன்றாக உள்ளது.இதனால் சமத்கிருத சொற்களின்றி தமிழால் இயங்க முடியாது என்பது போன்று ஒரு பொய்த்தோற்றம் திட்டமிட்டு உருவாக்கப்பட்டுள்ளது.ஆனால் உண்மை அதுவன்று.
      சொல்வளமும் இலக்கிய வளமும் மிக்க தமிழால் தனித்து இயங்க முடியும்.'சீரிளமை திறம்'மிகுந்த தமிழுக்கு ஊன்றுகோல் எதுவும் தேவையில்லை. .உண்மையில் தமிழ்,தெலுங்கு போன்ற மொழிகளின் துணையின்றி சமத்கிருதம்தான் இயங்க முடியாது.ஏனென்றால் அது பேச்சு வழக்கொழிந்து இறந்து பட்ட மொழி.ஆனால் நம் தாய்த்தமிழோ இன்றும் வாழும் மொழி.கோடிக்கணக்கான மக்களால் பேசப்படும் தமிழ் என்றும் அழியாது.தமிழ்த்தாயின் புதல்வர்கள் அதை அழியவும் விடமாட்டார்கள். வடமொழிச்சொற்கள் தமிழில் இருந்து அப்புறப்படுத்த பட வேண்டும் என்று நாம் கோருவது மொழி வெறியின் பாற்பட்டது என குற்றச்சாட்டுஎழலாம்.
       இல்லை,நிச்சயமாக இல்லை.மொழிப்பற்று, இனத்தின் மீது கொண்ட பற்று காரணமாகவே நாம் இவ்வாறு கோருகிறோம்.மொழி என்பது வெறுமனே கருத்துக்களை பரிமாறி கொள்வதற்கான கருவி மட்டுமல்ல.அம்மொழி பேசும் மக்களின் வரலாற்று மற்றும் பண்பாட்டு பெட்டகம் அது.
ஒரு இனம் எத்தகைய பண்பாடு,கலாச்சாரத்தை பின்பற்றுகிறது என்பது அவ்வினம் பேசும் மொழியை பொறுத்தே அமைகிறது.ஒரு மொழியின் மீது பிறிதொரு மொழியின் தாக்கம் என்பது தவிர்க்க முடியாத வகையில் பண்பாட்டு கலாச்சார விழுமியங்களையும் சேர்த்தே கொண்டு வருகிறது.அந்த அடிப்படையில் பார்க்கும்போது வடமொழியின் தாக்கம் தமிழ் சமூகத்திற்கு மிகுந்த தீங்கு இழைத்திருக்கிறது. ஜோஷ்யம், ஜாதகம், அதிர்ஷ்டம், துரதிர்ஷ்டம், அஷ்டமி, நவமி, வாஸ்து இந்த சொற்களை  அத்தனையும் வடமொழி.அத்தனையும் மூடநம்பிக்கைகள் எனவே வட மொழி என்பது அழுக்குகளை தமிழ் மீது அள்ளி இறைத்து சென்ற சூறைக்காற்று என்று பல அறிஞர்கள் ஊடகங்களில் வாயிலாக கூறிவருகின்றனர்.

மொழிச் சிதைவை களையும் வழிமுறைகள் 

1.   தமிழ் மொழி மீது பற்றுக் கொண்ட சமுதாயத்தை உருவாக்க தமிழாசிரியர்கள் மொழிப்பற்றினை தமிழ் மாணாக்கர்களிடம் விதைக்க வேண்டும். தமிழ் மாணவர்கள் தமிழ் மொழியை ஒரு பாடமாக மட்டும் பயிலாமல் தமிழ் மொழியைப் பிழையற பேசும் வண்ணம் புதிய குமுகாயம் இந் நாட்டில் உருவாக வேண்டும். தமிழ் மொழியின் தூய்மையான பேச்சைக் கேட்டு அனனத்து தமிழ் மக்களும் தமிழ் மொழியின் இனிமையை தங்கள் குழந்தைகள் அறிய முனைப்பு காட்ட வேண்டும். தமிழாசிரியர்கள் தமிழ் மொழியை ஒரு பாடமாக மட்டும் போதிக்காமல் தமிழ் மொழியை இனத்தின் அடையாளமாக போதிக்க வேண்டும். தமிழ் மொழி தன் ஊடே கொண்டிருக்கும் அற்புதங்களையும் சிறப்புகளையும் மக்களுக்கு எடுத்து கூற வேண்டும். ‘எழுத்தறித்தவன் இறைவன் ஆவான்’ எனும் திருமொழியை தமிழ் இனம் உணர தமிழாசிரியர்கள் பெரிதும் பங்காற்ற வேண்டும். மொழி அழிந்தால் இந்நாட்டில் தமிழ் இனம், கலை, கலாச்சாரம் அழியும் எனும் உணர்வை அனைவரும் உணர மொழிச்சிதைவைக் கண்டித்து தமிழாசிரியர்கள் ஊடகங்களில் கண்டணங்களைத் தெரிவிக்க வேண்டும். சிறந்த படைப்புகள் தமிழ் நாளிதழ்களிலும், வார மாத இதழ்களிலும், தமிழ் இணைய தளங்களிலும் உலா வர அதிக நாட்டமுடையவர்களாக தமிழாசிரியர்கள் இருக்க வேண்டும். செந்தமிழின் சிறப்புகளையும் தூய தமிழ் படைப்புகளையும் அனைவரும் கற்றுக் கொள்ள வழி வகுக்க வேண்டும். தூய தமிழில் அனைவரும் பேசும் முறையினை அறிமுகம் செய்திடல் வேண்டும்.  தமிழர்களிடையே தூய தமிழ் மொழிப் பற்றினை ஓங்கச் செய்வது தமிழாசிரியர்களின் தலையாய கடமையாகும்.  
  
2.   தமிழினம் மொழிச் சிதைவை உணராமல் கொடுந்தமிழுக்கு முக்கியத்துவம் கொடுப்பதை நிறுத்திக் கொள்ள வேண்டும். பகட்டான தமிழ் இனம் இந் நாட்டில் வாழ்ந்து பாடையிலேறும் முன் பண்பட்ட தமிழினமாக, மொழி வளம் கொண்டவர்களாக வாழ்ந்து வீழ்வது உத்தமம் எனும் நிலையை அடைய வேண்டும். இனமானம் கொண்ட குமுகாயம் மலர வேற்று மொழிக்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தை நிறுத்திக் கொள்ள பழகிக் கொள்ள வேண்டும். வேற்று மொழி மோகமுடைய மனப்போக்கினை மாற்றிக் கொள்ள வேண்டும். செம்மொழி என்ற உயர் தனிச் சிறப்பைப் பெற்றுள்ள தமிழ்மொழி, புலம் பெயர்ந்த நாடுகளில் வாழும் மொழியாக நிலைத்து நிற்க வேண்டுமென்றால் தூய  தமிழில் தமிழ் படித்தவர்கள் தமிழில் பேச வேண்டும். இந்நிலை நீடித்தால் செம்மொழியாகிய தமிழ், காலப்போக்கில் இலக்கிய வழக்கில் தனித் தமிழாகவும் பேச்சு வழக்கில் கலப்புமொழியாகவும் மாறித் தன் தனித்தன்மையை இழந்துவிடும் என்பதை தமிழ் படித்தவர்களாவது உணர வேண்டும். 

3.   தனியார் ஒலியலை தொலைக்காட்சிகளையும் வானொலிகளையும் புறக்கணிப்பு செய்ய வேண்டும். இந்த ஒலி. ஒளி ஊடகங்கள் தமிழ் மொழியை நாள்தோரும் சிதைத்து வருகின்றன. மொழிச் சிதைவுகள் பெருக்கம் காண இவர்கள் உறுதுணையாக உள்ளனர். தனியார் ஒலி, ஒளி அலைகள் மீது தமிழினம் அடிமையாகுவதை அரசியல் தலைவர்கள் தடுக்க வேண்டும். இவர்கள் பெருமளவில் பரப்புரைகளையும் விழிப்புணர்வுகளையும் நாடு முழுவதும் நடத்த வேண்டும். மொழிச் சிதைவு இனச்சிதைவை ஏற்படுத்தும் என்ற உண்மையை மக்களுக்கு எடுத்து கூற வேண்டும். இவர்கள் பச்சோந்தி தன்மையை மறந்து பொதுநல வாதிகளாகவும் உண்மை தலைவர்களாகவும் நடந்து கொள்ள வேண்டும்.


4.   தனியார் நிருவனங்களின் அநாகரிகத் தன்மையை இலக்கியவாதிகளும்  நாளிதழ் ஆசிரியர்களும் விமர்சனம் செய்ய தயக்கம் காட்டக்கூடாது. தனியார் தொலைக்காட்சிகள் , வானொலிகள் இலாபத்தை மட்டும் குறியாக வைத்து தமிழ் மொழியின் கன்னித்தன்மையை குறைத்து வருவதை மக்கள் அறியாத பேதைகளாகவும் மாக்களாகவும் வாழும் குருட்டு தனம் மலையகத்தில் மலையேற வேண்டும். தமிழை சிதைக்கும் சிற்றறிவாளர்களையும் அவர்கள் பேசும் கொடுந்தமிழையும் மக்களுக்கு எடுத்துரைக்க வேண்டும்.

5.   தமிழ்ச் சிதைவு ஏற்படுவதைக் கண்டித்து  எழுத்தாளர்கள் நாளிதழ்களில் விமர்சனம் செய்ய தமிழ் நாளிதழ்கள் வழி வகுக்க வேண்டும். எழுத்தாளர்கள் செம்மொழி சிதைவதை விளக்கி, மக்களுக்கு தெளிவான விளக்கம் கொடுக்க வேண்டும். எழுத்தாளர்கள் தரமான படைப்புகளை படைத்து மக்கள் மனதில் தமிழ் பயிரை வளர்க்க வேண்டும்.
 
6.   தமிழ் இயக்கங்கள் மொழிச்சிதைவுகளை அடையாளம் கண்டு அவற்றை களைய தக்க நடவடிக்கைகளை எடுத்த வண்ணமாக இருக்க வேண்டும். தனியார் நிகழ்ச்சிகளிலும் ஒலி, ஒளி நாடாக்களில் பயன்படுத்தப்படும் தமிழ் மொழிச் சிதைவுகளையும் புறக்கணித்து மக்களை தெளிவு பெற செய்ய வேண்டும். ஆங்கிலமும் மற்ற மொழி கூறுகளையும் உள்ளடக்கிய தமிழ் பாடல்களை மக்கள் கேட்காத வண்ணம் பரப்புரைகளை தமிழ் இயக்கங்கள் இணையம் மற்றும் அறிக்கைகள் வாயிலாக வெளியீடு செய்ய வேண்டும். இவ்வியக்கங்கள் தமிழ் மொழியில் பட்டிமன்றம், பேச்சுப் போட்டி, சொற்போர், கவியரங்கம், கருத்தரங்கம், நாடகம் போன்ற நிகழ்வுகள் நடத்தி மக்கள் மத்தியில் செந்தமிழின் தூய தன்மையையும் பேச்சு மொழியையும் வளப்படுத்த ஆணிவேராக இருத்தல் வேண்டும். 

7.   மொழிச்சிதைவு ஏற்படுவதை களைய மக்களிடையே மொழிப்பற்றை வளர்க்கும் பொது நிகழ்ச்சிகளை இலவசமாக படைத்தல் வேண்டும். இளைஞர்கள் விரும்பிய நிகழ்வுகள் தமிழ் மொழியில் படைத்தல் வேண்டும்.  ‘தூய தமிழில் பேசுங்கள்’ எனும் வாசகத்தை தமிழர்கள் மத்தியில் விளம்பரம் செய்யலாம்.

No comments:

Post a Comment